மனைவிக்கு 'கல்யாணப்பரிசு'.. சொந்த ஊருல ரூ.50 லட்சத்துக்கு வீடு!!.. வீடியோ வெளியிட்ட முனீஸ் ராஜா.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ராஜ்கிரண் மகளை சீரியல் நடிகர் முனீஸ் ராஜா திருமணம் செய்து கொண்டது தொடர்பான செய்தி, இணையத்தில் அதிகம் பரவ ஆரம்பித்து பரபரப்பையும் உண்டு பண்ணி இருந்தது.

இந்த நிலையில், இதுபற்றி தன் மனைவியுடன் இணைந்து ஒரு விளக்க வீடியோவை ஏற்கனவே வெளியிட்டிருந்தார் முனீஸ் ராஜா. அதில், “வணக்கம். நான் நடிகர் முனீஸ் ராஜா பேசுகிறேன். இவர் என் மனைவி பிரியா நாச்சியார். நாங்கள் இருவரும் காதலித்து ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி இருவீட்டு - பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு உங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். விரைவில் முறைப்படி உங்களுக்கு தகவல் சொல்கிறேன். ஆனால் எங்கள் திருமணம் தொடர்பான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி கேட்டு எங்களை தொடர்புகொண்டு வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் ஆதரவு தேவை, நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அவர் என்னுடைய வளர்ப்பு மகள் மட்டும் தான் என ராஜ்கிரண் குறிப்பிட்டு விளக்கம் ஒன்றையும் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், முனீஸ் ராஜா புதிதாக பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் முனீஸ் ராஜா, "என்னுடைய மனைவி ஆசைப்படி அவருக்கு என்னுடைய கல்யாண பரிசாக ஒரு தொழிலை ஆரம்பித்து வைக்கலாம் என நினைத்திருக்கிறேன். அதன் திறப்பு விழா இந்த மாத இறுதியில் வைக்கலாம் என்றும் திட்டம் போட்டிருக்கிறேன். இதற்கு என்னுடைய நண்பர்கள், உறவுகள், மீடியா நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் எனது அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்து தொழில் சிறப்பாக அமைய வாழ்த்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், தனது மனைவி பிரியாவுக்காக தன்னுடைய சொந்த ஊரில், சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு வீடு ஒன்றை புதிதாக முனீஸ் ராஜா கட்டி வருவதாகவும், அதன் வேலை இரண்டு மாதத்தில் முடிந்து விடும் என்றும் அதன் பிறகு, வீட்டின் திறப்பு விழா நிகழ்ச்சி இருக்கும் என்றும் முனீஸ் ராஜா குறிப்பிட்டுள்ளார். புது மனைவிக்காக ஒரு பக்கம் தொழில் தொடங்குவதாகவும், மறுபக்கம் புதிய வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் முனீஸ் ராஜா குறிப்பிட்டுள்ளது தொடர்பான வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.