Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

போடு சரவெடிய.. கார்த்தி நடிக்கும்"சர்தார்".. வெளியான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

Also Read | PS1: பிரபல தியேட்டரில் பொன்னியின் செல்வன்.. படம் பார்த்த ஷாலினி அஜித் குடும்பம்!

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விருமன்'. இந்த விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

இந்நிலையில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்  சர்தார் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

Also Read | தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? எல்லா சாதனைகளையும் முறியடித்த PS1!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Sardar movie releasing on 21st October Diwali Festival

People looking for online information on Karthi, Sardar, Sardar Movie Release Updates will find this news story useful.