www.garudabazaar.com

இந்த வருட தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் லிஸ்ட்! ஒரு பார்வை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்திய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

This Year Diwali Festival Release Movies List

Also Read | EXCLUSIVE: கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? சரவெடி அப்டேட்

ஓரி தேவுடா

ஓரி தேவுடா, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வரவிருக்கும் தெலுங்கு காதல் நகைச்சுவை திரைப்படம். தமிழில் வெளியான ஒ மை கடவுளே படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் தான் இந்த படம்.

காதலிப்பதாக நம்பப்படும் அர்ஜூன் & அனு, தங்கள் பெற்றோரின் முடிவின் பேரில் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் திருமணம்  தோல்வியில் முடியும் போது, திருமணத்தை மாற்றியமைக்க இரண்டாம் வாய்ப்பு கடவுளால் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகள் தான் ஓரி தேவுடா.

இப்படத்தில் விஷ்வக் சென், மிதாலி பால்கர், வெங்கடேஷ் டக்குபதி, ராகுல் ராமகிருஷ்ணா, முரளி சர்மா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

PRINCE

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

This Year Diwali Festival Release Movies List

சர்தார்

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு நாளை  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

This Year Diwali Festival Release Movies List

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது.

MONSTER

புலிமுருகன் வெற்றிக்குப் பிறகு மோகன்லாலை இயக்குநர் வைசாக் இயக்கியுள்ள மலையாள திரைப்படம். இப்படத்தில் லட்சுமி மஞ்சு, லீனா, ஹனி ரோஸ், சுதேவ் நாயர், சித்திக் மற்றும் கேபி கணேஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் வகைமையில் இந்த படம் வெளியாக உள்ளது. மோகன்லால் லக்கி சிங் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரையரங்குகளில்  அக்டோபர் 21‌ ஆம் தேதி வெளியாகிறது.

This Year Diwali Festival Release Movies List

ராம் சேது

ராமாயண காவியத்தில் இடம்பெறும் ராம் சேது இருப்பதை நிரூபிப்பதற்காக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.

அபிஷேக் ஷர்மா இயக்கிய இந்த படத்தில் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பாருச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படம் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thank God

அஜய் தேவ்கன் நடித்த இந்த ஃபேன்டஸி காமெடி  படம்  இயக்குனர் இந்திர குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

தேங்க் காட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படவெட்டு

This Year Diwali Festival Release Movies List

அறிமுக இயக்குனர் லிஜு கிருஷ்ணா இயக்கியுள்ள மலையாள  படமான இதில் நிவின் பாலி, மஞ்சு வாரியர், அதிதி பாலன் மற்றும் ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Also Read | பாராசூட்டில் இருந்து Cute ah குதித்த நஸ்ரியா.. த்ரில் தருணம்! வைரலாகும் SKY DIVE போட்டோஸ்!

தொடர்புடைய செய்திகள்

This Year Diwali Festival Release Movies List

People looking for online information on Diwali Festival, Diwali Festival Release Movies List will find this news story useful.