தர்பாரில் இருந்து சும்மா கிழி பிஜிஎம்... - ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

AR Murugadoss shares a Video about Rajinikanth's Darbar

இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் வெறித்தனமாக அனிருத் பின்னணி இசையமைக்கிறார். அதனை அருகில் அமர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரசித்து பார்க்கிறார்.

Entertainment sub editor