அனிருத் கொளுத்தும் பட்டாசு... மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கொலவெறி காம்போ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 24, 2019 11:13 AM
தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றிய 'வேலையில்லா பட்டதாரி', 'தங்க மகன்', 'மாரி' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது.

அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த படங்களிலும் பணிபுரியவில்லை. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் இளமை திரும்புதே பாடலை தனுஷ் எழுத, அனிருத் பாடியிருந்தார்.
இதனையடுத்து தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' படத்துக்காக விவேக் - மெர்வின் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளியாகவுள்ளது. பட்டாஸ் படத்தை R.S. துரை செந்தில்குமார் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Rockstar @anirudhofficial croons for #Pattas 💥@iamviveksiva - @MervinJSolomon
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 23, 2019
Musical #PattasThirdSingleOnDec25@dhanushkraja @durairsk @omdop @Lyricist_Vivek @actress_Sneha @Mehreenpirzada @Naveenc212 @AlwaysJani @LahariMusic pic.twitter.com/zQgJZObXJC