தனுஷின் அசுர விளையாட்டில் இணைந்த ‘ராட்சசன்’ பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 15, 2019 08:24 PM
‘வட சென்னை’ திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் ‘ராட்சசன்’ படத்தில் நடித்த பிரபலம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, ‘ராட்சசன்’ திரைப்படத்தில் ‘அம்மு’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ‘அசுரன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வரும் அக்.4ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திர்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.