'ஆடுகளம்'ல மதுரை ஸ்டைல்னா, 'அசுரன்'ல.... - பிரபல ஹீரோ ஓபன் அப்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 13, 2019 11:03 AM
ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '100 % காதல்'. இந்த படத்தை இயக்குநர் சுகுமார் மற்றும் புவனா சந்திரமௌலி இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை எம்.எம்.சந்திரமௌலி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த படம் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹீரோயின் ஷாலினி பாண்டேவும் இணைந்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர். அப்போது ஜி.வி.பிரகாஷ், வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் அசுரன் குறித்து பேசினார்.
அதில், ''ஆடுகளம்ல மதுரை பின்னணியில் அமைந்த நாட்டுப்புறப் பாடல் என்றால் இதில் மிகவும் பழைய காலத்து நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியிருக்கோம்.
ஆடுகளம்ல ஒத்த சொல்லால என்ன எனர்ஜி இருக்குமோ அதே எனர்ஜி இருக்கும் ஆனா வித்தியாசமான முறையில் இருக்கும். திருநெல்வேலி மொழி இந்த பாடல்களில் இடம் பெரும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
'ஆடுகளம்'ல மதுரை ஸ்டைல்னா, 'அசுரன்'ல.... - பிரபல ஹீரோ ஓபன் அப் வீடியோ