யூடியூபில் புதிய உச்சம் தொட்ட தனுஷின் ரவுடி பேபி..!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 13, 2019 12:28 PM
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த இப்பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Unstoppable 🤩
600 MILLION BABY!#RowdyBaby #Maari2
🎵https://t.co/FMrdiRwd70 @dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @PDdancing @AlwaysJani @vinod_offl @divomovies @RIAZtheboss #RowdyBabyHits600MViews pic.twitter.com/ggOnoiSoxS
— Wunderbar Films (@wunderbarfilms) August 13, 2019
யூடியூபில் புதிய உச்சம் தொட்ட தனுஷின் ரவுடி பேபி..! வீடியோ