பார்த்திபனின் One Man Show - ‘ஒத்த செருப்பு’ டிரைலர் வெளியீடு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 15, 2019 08:08 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்திருக்கிறார். ஒன் மேன் ஷோ-வாக உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு டிரைலர்கள் வெளியாகி நல்ல கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலரில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், ஷங்கர், ஆமிர்கான், ரசூல் பூக்குட்டி, யாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள், பார்த்திபனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். இப்படம் வரும் ஆக.30ம் தேதி வெளியகாவிருக்கிறது.
பார்த்திபனின் ONE MAN SHOW - ‘ஒத்த செருப்பு’ டிரைலர் வெளியீடு வீடியோ