இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த பட டிரெய்லர் குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 14, 2019 11:24 AM
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்து தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சங்கத்தமிழன் எனும் படத்தை வெற்றி மாறன் தயாரித்து வருகிறார். இந்த படத்தை உதயம் என்ஹெச் 3, பொறியாளன், புகழ் ஆகிய படங்களின் இயக்குநர் மணிமாறன் இயக்குகிறார்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்க, கருணாஸ், விஜே ரம்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Vetrimaaran, Sangathalaivan, Samuthirakani