கே.ஜி.எப்.2 படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 11, 2019 04:07 PM
பிரஷாந்த் நீல்-யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் வடசென்னை பட பிரபலம் சரண் சக்தி நடித்துள்ளார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எப். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தமிழ் நடிகர் சரண் சக்தி நடித்துள்ளார். இவர் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி சகா படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தின் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குனர் பிரஷாந்த் நீல்லிற்கு நன்றி என நடிகர் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.