www.garudabazaar.com

ராஷ்மிகா & அமிதாப் பச்சன் நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? கலர்ஃபுல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Rashmika Mandanna Amitabh Bachchan Good Bye Movie Release Date

Also Read | 'விக்ரம் வேதா' படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம்.. கைப்பற்றிய முன்னணி TV சேனல்! ஆஹா

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Rashmika Mandanna Amitabh Bachchan Good Bye Movie Release Date

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Rashmika Mandanna Amitabh Bachchan Good Bye Movie Release Date

இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் இணைந்து புதிய படமான Good Bye படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்றும் ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். ராஷ்மிகா உடன் நானே வருவேன் படத்தின் கதாநாயகன் எலிசபெத் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். விகாஸ் பால் இந்த படத்தினை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் ஒடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | யுவன் இசையில் 'நானே வருவேன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. எப்போ ரிலீஸ்? சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna Amitabh Bachchan Good Bye Movie Release Date

People looking for online information on Amitabh Bachchan, Good Bye Movie, Good Bye Movie Release Updates, Rashmika Mandanna will find this news story useful.