www.garudabazaar.com

'விக்ரம் வேதா' படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம்.. கைப்பற்றிய முன்னணி TV சேனல்! ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனல் கைப்பற்றி உள்ளது.

Vikram Vedha Movie Satellite TV Rights Bagged by Colors Cineplex

Also Read | பிரபல OTT-க்கு தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ரசிகர்களை கவரும் மெர்சலான தமிழ் டிரெய்லர்!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில்  இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

Vikram Vedha Movie Satellite TV Rights Bagged by Colors Cineplex

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. பின்னர் லக்னோவில் நடைபெற்றது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Vikram Vedha Movie Satellite TV Rights Bagged by Colors Cineplex

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Vikram Vedha Movie Satellite TV Rights Bagged by Colors Cineplex

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Ponniyin Selvan 1: "ரவிதாசன்".. பொன்னியின் செல்வன்.. அடுத்த மாஸ் கேரக்டர் லுக்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Vedha Movie Satellite TV Rights Bagged by Colors Cineplex

People looking for online information on Colors Cineplex, Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha will find this news story useful.