தீபிகா படுகோன், ரன்பீர் சிங் உள்ளிட்டோர் மீது போதைப் பொருள் குற்றம்சாட்டிய பாஜக எம்எல்ஏ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 04:27 PM
மை நேம் இஸ் கான், ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர் கரண் ஜோகர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபிகா படுகோன், விக்கி கௌசல், ஷாகித் கபூர், ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கு பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா, பாருங்கள் பாலிவுட் பிரபலங்கள் போதையில் திளைப்பதை. போதைப் பொருட்கள் பயன்படுத்தியதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மிலிந்த் டியோரா, எனது மனைவியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். யாரும் போதையில் இல்லை. பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள். மேலும் உங்களுக்கு தெரியாத மக்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
My wife was also present that evening (and is in the video). Nobody was in a “drugged state” so stop spreading lies & defaming people you don’t know!
I hope you will show the courage to tender an unconditional apology https://t.co/Qv6FY3wNRk
— Milind Deora मिलिंद देवरा (@milinddeora) July 30, 2019