ஆஸ்கரில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவிருக்கிற திரைப்படம் எது தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 21, 2019 10:07 PM
உலக அளவில் திரைப்படங்களுக்கும் திரைக்கலைஞர்களுக்கும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஆங்கில மொழிப்படங்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளில் வெளியாகும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் ஹிந்தியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான 'கல்லி பாய்' திரைப்படம் இடம் பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த 'கல்லி பாய்' திரைப்படத்தை ஜோயா அக்தர் இயக்கியிருந்தார். எக்ஸெல் எண்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபி புரொடக்ஷன் தயாரித்திருந்தது.
Tags : Oscar, Gully Boy, Ranveer Singh