www.garudabazaar.com
iTechUS

Michael : “மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு அடுத்தமுறை உழைப்பேன்” .. மைக்கேல் பட இயக்குநர் ட்வீட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வெளியான படம் மைக்கேல்.

Ranjith Jeyakodi on Sundeep Kishan Michael Movie reception

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO : மைனஸ் 5 டிகிரியிலயா.. விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங்.. காஷ்மீர்ல எங்க? செம அப்டேட்..!

இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள்  இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளன.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்‌ஷ்மி சரத்குமார், வருண் சந்தீஷ்,  அனுசிய பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய,  திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

Ranjith Jeyakodi on Sundeep Kishan Michael Movie reception

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள் குறித்து தமது கருத்தை ட்விட்டரில் வெளியிட்ட இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு.. எனது எல்லாப் படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும்.

மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக.. ஆகப்பெரும் வாஞ்சையுடன்-ரஞ்ஜித் ஜெயக்கொடி” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | வெற்றிமாறன் உருவாக்கத்தில் வெப்சீரிஸாகும் அற்புதம் அம்மாள் பயோபிக்? இயக்குநர் இவரா?

தொடர்புடைய இணைப்புகள்

Ranjith Jeyakodi on Sundeep Kishan Michael Movie reception

People looking for online information on Gautham Menon, Ranjith Jeyakodi Sundeep Kishan Michael, Vijay Sethupathi will find this news story useful.