Reliable Software
www.garudabazaar.com

ரம்யா பாண்டியனின் அசுர வளர்ச்சி.. என்ன வாங்கி இருக்கிறார் பாருங்க.. தம்பி வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரம்யா பாண்டியனுக்கு தற்போது அறிமுகமே தேவை இல்லை. ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கையில் மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் இருக்கிறது. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமடைந்தார். கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராக பங்கேற்றார். புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார்.

ramya pandiyan huge surprise to fans ரம்யா பாண்டியனின் அசுர வளர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தார் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.

ramya pandiyan huge surprise to fans ரம்யா பாண்டியனின் அசுர வளர்ச்சி

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரம்யா பாண்டியன்  இருந்த போதும் கூட அவரது குடும்பத்தினர் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். அதிலும் முக்கியமாக அவரது தம்பி பரசு பாண்டியன் அக்காவிற்கு  ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்பொழுது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது "ரம்யா பாண்டியன் அக்கா! உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது முதல்ல பிஎம்டபிள்யூ. 2011ஆம் ஆண்டு 21G இப்பொது 2021-ல் பிஎம்டபிள்யூ GT" என்று மாஸான பதிவு ஒன்றை அவர்  வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ramya pandiyan huge surprise to fans ரம்யா பாண்டியனின் அசுர வளர்ச்சி

People looking for online information on Ramya Pandiyan will find this news story useful.