www.garudabazaar.com

இதான் உங்க டக்கா 'பிக்பாஸ்' ஏன் இப்படி?... கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியில் அந்த வரலாற்று சம்பவம் நடந்தே விட்டது. ஆமாம். பிக்பாஸ் வீட்டில் சண்டையா? என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோட் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்திருக்கும். ஆனாலும் பிக்பாஸின் நாரதர் வேலையால் வரும் நாட்களில் 'வானத்தை போல' படம் போல இருக்கும் இந்த வீடு இன்னும் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Bigg Boss Tamil 4: Ramya Pandiyan selected as a Captain

ரசிகர்களின் மனங்கவர்ந்த ரம்யா பாண்டியன் ஏன் கன்பெக்ஷன் ரூமில் இருக்கிறார்? என்னும் கேள்விக்கு விடை தெரிந்து விட்டது. எல்லாரும் கார்டன் போங்க என பிக்பாஸ் சொல்ல ஏதோ இருக்கு என எதிர்பார்த்த ரசிகர்ளுக்கு ஏமாற்றம் தான். கலர்,கலர் பந்துகளை கொடுத்து யாருக்கு பந்து இல்லையோ அவரை கேப்டனாக தேர்வு செய்து விட்டார்.

இது ரம்யாவுக்கே சற்று ஷாக் ஆகத்தான் இருந்திருக்கும். தலையில் ஒரு கிரீடத்துடன் வெளியே வந்த அவர் தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை லேசான வெட்கத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து பொறுப்பாக டீம் பிரித்து வேலைகளையும் பிரித்து கொடுத்தார். ரம்யா கேப்டன் ஆனது மகிழ்ச்சி தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் பெரிய டாஸ்க் ஆக கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Ramya Pandiyan selected as a Captain

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.