Reliable Software
www.garudabazaar.com

அஸ்வின் நீண்ட கால கனவு நிறைவேறியது... அவரே வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி சீசன் 2 இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை அஸ்வின் ஷிவாங்கி காம்போ வேற லெவல் ஹிட்டடித்தது. உண்மையில் நீண்டகாலமாகவே அஸ்வின் திரைத்துறையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மிகப்பெரிய பிரேக்கிங் ஆக அமைந்துள்ளது. தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாவதற்கு முன்பு, துல்கர் சால்மான் நடித்த இயக்குனர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' மற்றும் துருவ்வின் 'ஆதித்ய வர்மா' படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சில மாதங்கள் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவரது மிகப் பெரிய கனவாக இருந்து வந்தது.

ashwin longterm dream accomplished அஸ்வின் நீண்ட கால கனவு நிறைவேறியது

இந்நிலையில் இன்று குக் வித் கோமாளி  சீசன்2 முடிந்துள்ள நிலையில், அடுத்த அதிரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஹீரோவாக நான் முதல் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதைப்  பற்றி தான் தற்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். இந்த படம் ஒரு நல்ல மகிழ்ச்சியான திரைப்படமாக உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் நான் விரும்பும் ஒருவரும், நீங்கள் அனைவரும் விரும்பும் ஒருவரும் இந்த படத்தில் இருக்கிறார். அது வேறு யாருமில்லை புகழ்தான். நாங்கள் இருவரும் ஒரு ஹீரோ காமெடியனாக உங்களை நிச்சயம் மகிழ்விப்போம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Ashwin, Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

ashwin longterm dream accomplished அஸ்வின் நீண்ட கால கனவு நிறைவேறியது

People looking for online information on Ashwin, Pugazh will find this news story useful.