www.garudabazaar.com
iTechUS

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2.. படத்தின் தாறுமாறான அடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Shankar Kamal Haasan Indian2 next schedule starts at Tirupathi

Also Read | "H. வினோத், விஜய் சார்க்கு இரண்டு கதை வச்சுருக்கார்".. மனோபாலா பகிர்ந்த EXCLUSIVE தகவல்! வீடியோ

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

Shankar Kamal Haasan Indian2 next schedule starts at Tirupathi

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Shankar Kamal Haasan Indian2 next schedule starts at Tirupathi

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

Shankar Kamal Haasan Indian2 next schedule starts at Tirupathi

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நாளை மறுநாள் 21 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | வடிவேலு தாயாரின் இறுதிச்சடங்கில்.. அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி.. உருக்கமான வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Kamal Haasan Indian2 next schedule starts at Tirupathi

People looking for online information on Indian 2, Indian 2 Movie update, Kamal Haasan, Shankar will find this news story useful.