www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கார் பயணம்.. பார்த்திபன் பகிர்ந்த THROWBACK சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.

R Parthiban tweet about car travel with super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கேரள பாரம்பரிய முறையில் நடிகை பூர்ணாவின் வளைகாப்பு.. வேட்டி அணிவித்த உறவினர்கள்! வீடியோ

இயக்குனர் நடிகர் பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் நடித்து  இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று

திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படம் சில மாதங்களுக்கு முன் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கார் பயணம் செய்த தருணத்தை நினைவு கூர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

R Parthiban tweet about car travel with super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

அதில், "மறைந்த Mkt அவர்களைப் பற்றி கேட்டதுண்டு,மறைந்த MGR அவர்களை பார்த்ததுண்டு ஆனால் என் மனம் நிறைந்த ரஜனி சாரோடு நெருங்கிப் பழகுபவன் நான் Super star மட்டுமின்றி super human ஆகவும் அவரை தரிசித்த அன்று -என்னை இறக்கி விட்டுவிட்டு சென்று கொண்டிருந்த அவர் காரை பார்த்தபடி நான் எழுதியக் கவிதை.

‘விலக விலக புள்ளிதானே நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்?’

எனக்கும் அவருக்குமான உறவு அற்புதத்திற்கு அடுத்த பதம்!

மறைந்த ஒருவரை நினைவு கூறும் நாளில் அவர் பெருமையை சொல்வது மட்டுமே என் நோக்கம்.எதிர்வினையாக சிந்தித்து பதிவிடும் நண்பர்கள் அவருக்கு புகழ் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அருவருப்பாக வார்த்தைகளை பிரயோகப்படுத்தி

“அவரது ரசிகர்களா இப்படி” என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள்.நம்ம super star-யிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது “விரோதியைக் கூட நோகடிக்காத அவரது எளிமையான தன்மையான பண்பு!”

Good night!!!" என நடிகர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | THALAIVAR170: ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் ரஜினி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

R Parthiban tweet about car travel with super Star Rajinikanth

People looking for online information on R parthiban, R Parthiban tweet, Rajinikanth will find this news story useful.