''ரொம்ப பெரிய சர்ப்ரைஸா இருக்கும்'' - சீக்ரெட் சொல்லும் தளபதி விஜய்யின் 'பிகில்' பட பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ramanagirivasan Speaks about Atlee and Thalapathy Vijay's Bigil

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 12) மாலை 6  மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாசிரியர் ரமணகிரி வாசன் 'பிகில்' படத்தில் தளபதி விஜய் குறித்து பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், ''இது ஸ்போர்ட்ஸ் படமா பண்ணலாம்னு முடிவு பண்ணப்போ பெண்கள் ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து பண்ணலாம்னு தோணுச்சு.

அப்போ எங்க டீம் ஒரு மேட்ச் பார்க்க கோவா போணோம். ரெண்டு மாநிலத்தை சேர்ந்த பெண்கள் ஃபுட் பால் டீம், மாநில அளவிலான போட்டிக்கான எந்த சூழலும், வசதியும் இல்லாம விளையாண்டுட்டு இருந்தாங்க. அப்போ நாங்க இந்த பொண்ணுங்களோட கஷ்டத்தை படமாக்கலாம்னு முடிவு பண்ணோம்.

குறிப்பா அதுல வாழ்க்கையில வெற்றிக்காக போராடிட்டு இருக்குற ஒரு சில பொண்ணுங்களோட கஷ்டத்தை சொல்லலாம்னு இருந்தோம். அத விஜய் சார் மாதிரி பெரிய ஹீரோவோட சொல்றப்போ அது பெரிய ரீச் கிடைக்கும். பின்னர் அதனை படமாக பார்க்கும் போது, படத்துல வேலை செஞ்ச எங்களுக்கே பெரிய சர்ப்ரைஸா இருந்துச்சு. ஆனா அது பத்தி எதுவுமே தெரியாத ஆடியன்ஸ்க்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கும்'' என்றார்.

''ரொம்ப பெரிய சர்ப்ரைஸா இருக்கும்'' - சீக்ரெட் சொல்லும் தளபதி விஜய்யின் 'பிகில்' பட பிரபலம் வீடியோ