'நாம சேர்ந்து படம் பன்றதுல என்ன சிக்கல்?' - இயக்குநர் அட்லிக்கு ஹாலிவுட் நடிகர் கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம்  வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Hollywood Actor Bill Duke tweets about Bigil Director Atlee

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரிடேட்டர், கமாண்டோ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டூக் அட்லி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''ஹாலிவுட்டில் இருந்து வாழ்த்துகள். நமது நாடுகள் நாம் இணைந்து படம் உருவாக்குவதில் என்ன சிக்கல் ?'' என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அட்லி, ''இரண்டு வித்தியாசமான மனிதர்கள் சினிமாவின் மீதுள்ள காதலுக்காக இணைந்து படம் இயக்குவது இலகுவானது மற்றும் மகிழ்ச்சிகரமானதும் கூட. உங்களால் குறிப்பிடப்பட்டது பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு எனது மரியாதையும் அன்பும். இதிலிருந்து பெரிய கனவுகள் தொடங்குகிறது..!'' என்று தெரிவித்துள்ளார்.