www.garudabazaar.com

bigg boss 6 tamil : “யாரோ சண்ட போடுறதுக்கு நாம ஏன் கடி வாங்கணும்” - சிறையில் புலம்பிய ராம், ஜனனி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ram ramasamy janany first two in jail task bigg boss 6 tamil

Also Read | Bigg boss 6 tamil : "இதனாலயே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" - VJ மகேஸ்வரி உருக்கம்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ram ramasamy janany first two in jail task bigg boss 6 tamil

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுக்கின்றன.

ram ramasamy janany first two in jail task bigg boss 6 tamil

பிக்பாஸில் இன்னும் ஒரு முக்கிய அம்சமாக போட்டியாளர்கள் சிறைக்கு செல்லக்கூடிய டாஸ்க் இருக்கிறது. இதில் இந்த 6 வது சீசனில் ராமசாமி மற்றும் ஜனனி இருவரும் சிறைக்கு முதலில் அனுப்பப் படுகின்றனர். இவர்களுக்கான சிறை ஆடையை ஜிபி முத்து கொண்டு வந்து கொடுக்கிறார். பின்னர் சிறைக்கு செல்லும் ராமசாமி மற்றும் ஜனனி இருவருமே அமர்ந்து கொண்டு தங்களுடைய நிறை குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ram ramasamy janany first two in jail task bigg boss 6 tamil

அதில் ஜனனி, “மற்றவர்களைவிட நாம் என்ன செய்யாமல் விட்டு விட்டோம் ? நாம் ஏன் சிறைக்கு வந்திருக்கிறோம் ?” என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராம், “அதுதான் எனக்கும் சந்தேகம் .. யாரோ இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. நாம் ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டு கடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்?” என்று கேட்கிறார். இவை குறித்த விரிவான விவரங்களை எபிசோடில் காண முடியும்.

Also Read | Bigg boss 6 tamil : ‘சின்ன வயசுலயே போலியோ அட்டாக்..’.. நடன மாஸ்டர் ராபர்ட்.. கண்ணீர் கதை.!

தொடர்புடைய இணைப்புகள்

ram ramasamy janany first two in jail task bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany, Ram ramaswamy, Vijay tv will find this news story useful.