www.garudabazaar.com

"ஆம்பளயே புடிக்காதா உங்களுக்கு??".. GP முத்து கிண்டல்.. அசல் ஜாலி பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

GP muthu fun question to asal kolaar biggboss 6 tamil

Also Read | Bigg boss 6 tamil : ‘சின்ன வயசுலயே போலியோ அட்டாக்..’.. நடன மாஸ்டர் ராபர்ட்.. கண்ணீர் கதை.!

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் அதிகமாக உள்ளது.

GP muthu fun question to asal kolaar biggboss 6 tamil

இதனிடையே, சமீபத்தில் அசல் கோலார் மற்றும் தனலட்சுமி இடையே வாக்குவாதமும் பெரிய அளவில் உருவாகி பிக்பாஸ் வீட்டிற்குள் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, விக்ரமன், அசீம், ADK, ஜிபி முத்து ஆகியோரிடையே நடந்த உரையாடல் கூட அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

தொடர்ந்து சமீபத்திய டாஸ்க் ஒன்றில், ஆயிஷா, அசீம், விக்ரமன் உள்ளிட்டோரிடையே உருவான வாக்குவாதமும் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிக களேபரத்தை உண்டு பண்ணி இருந்தது. ஆனால், அதே வேளையில் ஏதாவது கலகலப்பான விஷயங்கள் கூட பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசல் கோலாரிடம் ஜாலியாக ஜிபி முத்து கேட்ட விஷயங்கள், இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.

GP muthu fun question to asal kolaar biggboss 6 tamil

ADK, ராம், ஜிபி முத்து உள்ளிட்ட சிலர் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அசல் கோலாரை அழைத்துக் கொண்டு அமுதவாணன் அங்கிருந்து செல்வதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அசல் கோலாரிடம் பேசும் ஜிபி முத்து, "இப்ப எல்லாம் உங்களுக்கு ஆம்புளைங்கள புடிக்குறது இல்லையே" என கேட்கிறார். தொடர்ந்து, இனி உங்களுடன் இருப்பேன் என அசல் கோலார் பதில் சொல்கிறார்.

GP muthu fun question to asal kolaar biggboss 6 tamil

இதன் பின்னர் பேசும் ஜிபி முத்து, "முன்னாடி எல்லாம் அண்ணன், அண்ணன்ன்னு எவ்ளோ பாசமா தம்பிங்க எல்லாம் வருவீங்க. இப்ப ஏன் தம்பி மாறிட்டீங்க நீங்க" என்றதும், இனி மாறமாட்டேன் என்றும் அசல் கோலார் தெரிவிக்கிறார்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | "போய் வேலைய பாருடா".. சீறிக்கொண்ட அசீம் & விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டிற்குள் களேபரம்!?

தொடர்புடைய இணைப்புகள்

GP muthu fun question to asal kolaar biggboss 6 tamil

People looking for online information on Asal kolaar, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, GP MUTHU will find this news story useful.