செல்வராகவன் பற்றிய பிம்பத்தை உடைத்த பிரபல எடிட்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

'If not a director, he would become a musician'- NGK Editor Praveen K.L about director Selvarghavan

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியல் த்ரில்லர் ஜானரில் உருவான விதம் குறித்து இப்படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல், Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இயக்குநர் செல்வராகவனுடன் முதல் முறையாக பணியாற்றினாலும், எந்த கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக பணியாற்ற இடம் கொடுத்தார். வழக்கமான செல்வராகவனின் ஸ்டைலுடன் சூர்யாவின் நடிப்பும் கலந்து வேற லெவலில் படம் வந்திருக்கிறது.

செல்வராகவன் பற்றி அவர் மீது ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை. ஒரு குழந்தை மாதிரி அவருக்கு வேண்டும் என்பதை கேட்டு வாங்கிக் கொள்வார். அவருடன் பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

மேலும், இசையில் இயக்குநர் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம் என்றும், ஒருவேளை அவர் இயக்குநராகவில்லை என்றால் நிச்சயம் இசையமைப்பாளராகியிருப்பார் எனவும் எடிட்டர் பிரவீன் கே.எல் தெரிவித்தார்.

செல்வராகவன் பற்றிய பிம்பத்தை உடைத்த பிரபல எடிட்டர் வீடியோ