Yaanai

சிம்பு மற்றும் மனைவியோடு T ராஜேந்தர்… இலண்டனில் இருந்து வெளியான சமீபத்தைய புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நடிகர்  T ராஜேந்தரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

T Rajendar latest photo with simbu from London

உடல்நலக்குறைவு

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் கடந்த மாதம் சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

T Rajendar latest photo with simbu from London

வெளிநாட்டு சிகிச்சை

இதையடுத்து அவரது மகன் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில்  சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து  T ராஜேந்தர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சைக்காக லண்டன்  சென்றார்.

T Rajendar latest photo with simbu from London

லண்டனில் இருந்து புகைப்படம்

இந்நிலையில் இப்போது லண்டனில் இருந்து டி ராஜேந்தரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரோடு சிம்பு மற்றும் மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

T Rajendar latest photo with simbu from London

People looking for online information on London, Simbu, T Rajendar will find this news story useful.