வசூல் மழை பொழியும் 'பொன்னியின் செல்வன்'.. உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? முழு விவரம்
முகப்பு > சினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் படத்தின் உலகளாவிய மொத்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
Also Read | 'வலிமை' ஹூமா குரேஷிக்கு ஜோடியான தவான்.. வைரலாகும் ஷிகர் தவானின் ROMANTIC 1st LOOK!
இயக்குனர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படம், IMAX 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியதை அடுத்து சிறப்பு காட்சிகள் பல இடங்களில் திரையிடப்பட்டன. தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது. 3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்தது.
இந்த படம் 10 நாளில் 300+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த படம் 2.0 படத்தின் வசூலை முறியடித்து முதலிடம் பிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இந்த படம் 41.42 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் தற்போது வரை சுமார் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் சூப்பர் ஹிட் ரீமேக் படம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான 1st LOOK போஸ்டர்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Seenu Ramasamy Emotional Over Critics PS1 Maniratnam
- Director Shankar Tweet About Ponniyin Selvan PS1 Maniratnam
- Lyca And Red Giant Movies Wishes Maniratnam For Ps 1 Success
- Ponniyin Selvan 1 Collects 80 Crores Worldwide On Its First Day
- Ar Rahman Reaches 7 Million Insta Followers Shares Post
- PS1 Parthiban Jolly Comment On Maniratnam Thanking Message
- Thalapathy Ravanan PS1 Maniratnam Epic In His Movies Exclusive
- Is PS1 Relatable For Only Novel Readers Maniratnam Answers
- Maniratnam Faced Difficulties Making Ponniyin Selvan Exclusive
- How Ponniyin Selvan Differs With Bahubali Maniratnam Exclusive
- Ar Rahman Shares Video Her Student Playing Piano
- Thrisha Aishwarya Rai And AR Rahman Pic At PS 1 Function
தொடர்புடைய இணைப்புகள்
- JAYAM RAVI-ய Follow பண்ண போது தவறி விழுந்த CAMERA MAN... PONNIYIN SELVAN SHOOTING SPOT
- "Mallipoo பாட்டு மனச மயக்குது"... சொக்கிப்போன Seeman ❤️ STR, AR Rahman, Gautham Menon, Thamarai 🔥VTK
- இது தான் GVM-ஓட 5 Best Scenes? Amateur-அ எடுத்த Scene அது 😱 Gautham Transparent To His Fans
- Ponniyin Selvan Book படித்தவர்களுக்கு Challenge.. Kalki எழுத போன Real Locations உங்களுக்கு தெரியுமா?
- Ponniyin Selvan Grand Set Making Video & Secrets Revealed By The Legend Thota Tharani, Art Director
- இதுதான் Correct-னு எப்படி சொல்லுவீங்க 💥 MANIRATNAM About PONNIYIN SELVAN
- Vetrimaaran, Rajaraja Cholan-Hindu Controversy? "PS வெற்றியை கொண்டாடும் போது" - Siva Ananth Responds
- Vetrimaaran, Rajaraja Cholan Hindu Controversy...KAMAL கொடுத்த பதில்
- தெறி 🔥Trisha, Aishwarya Rai அழகோட, திமிரோட, கம்பீரமா 1st Meet பண்ற Scene - Arjun Interview
- Aishwarya Rai இல்ல அவங்க மாமியாரையும் கவனிச்சிருக்கேன்🤣Parthiban's நக்கல் நய்யாண்டி ROAST Interview
- Wow! என்னா Dialogue Delivery 🔥 GVM, Daniel Recreates Best Scene From Vettaiyadu Vilayadu
- BAAHUBALI Vs PONNIYIN SELVAN COMPARISONS - MANI RATNAM'S ANSWER 🔥 INTERVIEW