www.garudabazaar.com

"ராஜூ என்னை Hate பண்றாரா?".. BiggBoss ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வரை தம் இருப்பதை தக்க வைத்தவர்.

Raju negative comments on Pavani im interviews answer to fan

நடிகை பாவனி

விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த பாவனி, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்துகொண்டார். இந்த சீசனில் பாவனி கதை சொல்லும் டாஸ்க்கில் தமது உருக்கமான கதையை கூறியிருந்தார். கணவரது மறைவு, அதன் பின்னர் திரைவாழ்வு, தனிமை என பலவற்றையும் தனி ஒரு பெண்ணாக சந்தித்தது பற்றி பேசிய பாவனிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறினர்.

Raju negative comments on Pavani im interviews answer to fan

பாவனி ஆர்மி

அத்துடன், பாவனிக்கு ஆர்மி தொடங்கி ரசிகர்கள் அவருக்கு அன்பை கொடுத்துவந்தனர். இதேபோல் ராஜூவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பிக்பாஸின்போதும் பிக்பாஸ் முடிந்த பின்னரும் நீடித்து வருகின்றனர். மக்களின் ஏகோபித்த அன்பை பெற்ற ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சிசனில் வெற்றியும் பெற்று பிக்பாஸ் ட்ரோஃபியை கைப்பற்றினார்.

Raju negative comments on Pavani im interviews answer to fan

ரசிகரின் திடீர் கேள்வி

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், ரசிகர்களுடன் உரையாடிய பாவனி, ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்படி ஒரு பதிலில், ரசிகர் ஒருவர், “இண்டர்வியூக்களில் உங்களை பற்றி ராஜூ நெகடிவ் கமெண்டுகளை கொடுப்பதாக தோன்றுகிறதே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்டுள்ளனர்.

Raju negative comments on Pavani im interviews answer to fan

இந்த கேள்வியில் இருக்கும் விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ராஜூ எந்த இடத்தில் அவ்வாறு பதிவு செய்திருக்கிறார், அதில் ராஜூ கூற விரும்பிய கருத்து என்ன? என பல விஷயங்கள் இருப்பினும் ரசிகர் ஒருவர் இவ்வாறு தமது தரப்பு கேள்வியை பாவனியின் முன்னிலையில் வைத்தார்.

Also Read: ஒரே நாளில் 3 பட firstlook!.. விஜய்யுடனும் விஜய் சேதுபதியுடனும் கலக்கும் Photos.. வேற லெவல்பா ‘மாஸ்டர்’ மகேந்திரன்!

ரசிகருக்கு பாவனி பதில்..

ரசிகரின் இந்த கேள்வி பாவனிக்கு சற்றே அதிர்ச்சி தரும் விதமாக அமைந்திருப்பதை அவரது ரியாக்‌ஷன்களில் காண முடிந்தது, இருப்பினும் ம்ம்ம்.. என்று அமைதியாகவே அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார். அதன்படி ரசிகரின் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பாவனி அளித்த பதிலில் தமது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் அவங்களுக்கு ஸ்பெஷல் தானே?

Raju negative comments on Pavani im interviews answer to fan

அதில், “நான் நார்மலாகவே நெகடிவ் கமெண்ட்களை புறக்கணித்துவிடுவேன், எடுத்துக்கொள்ள மாட்டேன். அவற்றை அப்படி பேசிருக்காங்கனா.. அவங்க என்ன பேசிருக்காங்கனு எனக்கு தெரில.

ஒருத்தர் என்னை Hate பண்ணுகிறார் என்றால், அவ்ளோ முக்கியத்துவம், அதுக்காகவாச்சும் எனக்கு அவங்க வாழ்க்கையில கொடுக்குறாங்களே... அதுக்கு தேங்க்ஸ்.. அப்படியானால் நான் அவங்களுக்கு ஸ்பெஷல் தானே?” என ஜாலியாக பேசியுள்ளார்.

Also Read: தளபதி விஜய்.. நண்பனுக்காக Bigg Boss பார்த்து.. "வெளில வந்தாப்றம் என்ன சொன்னாரு? Exclusive

"ராஜூ என்னை HATE பண்றாரா?".. BIGGBOSS ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Raju negative comments on Pavani im interviews answer to fan

People looking for online information on Bigg Boss Pavani, Bigg boss title winner raju, Pavani, Raju will find this news story useful.