www.garudabazaar.com

ஒரே நாளில் 3 படம்!.. விஜய்யுடனும் விஜய் சேதுபதியுடனும் கலக்கும் Photos.. வேற லெவல் மகேந்திரன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Master Mahendran: நடிகர் மகேந்திரன் தமது பிறந்த நாளை நடிகர் விஜய்யுடன் கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சி ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதேபோல் நடிகர் மகேந்திரன் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

‘மாஸ்டர்’ மகேந்திரன்

தமிழ்த் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக ‘மாஸ்டர்’ மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த மகேந்திரன், அண்மைக் காலங்களில் அதிரடியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

கரா திரைப்படம் (Karaa)

முன்னதாக விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தில், இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து அசத்தினார் மாஸ்டர் மகேந்திரன். இந்நிலையில் பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள "கரா"  படத்தின் First look poster-ஐ  நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வில்லியம்ஸ் கையாளுகிறார். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். கிரேய்சன் எடிட்டிங் பண்ணுகிறார்.  சண்டை பயிற்சியை ரவி அளிக்கிறார்.

அமிகோ காரேஜ் (Amigo garage) திரைப்படம்

இதேபோல் பீப்பிள் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்கும் அமிகோ காரேஜ் திரைப்படத்தில் மாஸடர் மகேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. பிரஷாந்த் நாகராஜன் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்கிறார்.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

ரிப்பப்பரி (RIPUPBURY)

இத்துடன், நா.அருண் கார்த்திக் தயாரிப்பில் உருவாகும் ரிப்பப்பரி எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் ஏ.கே இயக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

ஒரே நாளில் 3 படம்.. அதுவும் பிறந்த நாளில்...

இப்படி ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23-ஆம் தேதியில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ஒரே நாளில் 3 படங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி அசத்தியுள்ளன.

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

இவ்வளவு விஷயங்களும் இன்னொரு முக்கிய காரணத்தால் அழகாகியுள்ளன. ஆம், அதுதான் மகேந்திரனின் பிறந்த நாள் (ஜனவரி 23). வாழ்த்துக்கள் ப்ரோ!

Also Read:  பிறந்த நாளில் ‘அடுத்த படம்’ குறித்து மனம் திறந்த அதர்வா, ஜி.வி.பிரகாஷ் படங்களின் இயக்குநர்!

தொடர்புடைய இணைப்புகள்

3 firstlooks mahendran birthday pics with vijay vijay sethupathi

People looking for online information on Actor Mahendran, Amigo garage, Karaa, Mahendran, Master, Master Mahendran, Rebupbury, Ripupbury, Vijay Sethupathi will find this news story useful.