ரஜினி பட ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை.! - போலீஸ் மூலமாக தீர்வு காணும் முயற்சியில் நடிகை.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஷோபனா தனது ஃபேஸ்புக் பக்கம் ஹாக் செய்யப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் ஷோபனா. ரஜினியுடன் இவர் நடித்த தளபதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. நடிப்பது மட்டுமின்றி பாரம்பர்ய நடனத்திலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதனிடையே ஷோபனா தனது ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஹாக் செய்யப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''எனது ஃபேஸ்புக் பக்கத்தையும் என் அக்கவுன்ட்டையும் யாரோ ஹாக் செய்திருக்கிறார்கள். காவல்துறை மூலமாக இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இவையெல்லாம் முடிந்த பிறகு நான் ஆக்டிவ்வாக பதிவிடுவேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி' என அவர் தெரிவித்துள்ளார்.