இதையும் 'செஞ்சா' பேருதவியா இருக்கும்... 'வைரலாகும்' ரஜினியின் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும், தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு நான் சில திட்டங்களை வைத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்தின்  சமீபத்திய அரசியல் பேச்சு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழகத்திலும் ஒரு சூறாவளியை ஏற்படுத்தியது.

அரசிடம் வேண்டுகோள் விடுத்த ரஜினி | rajinikath request to Tamilnadu Government

மேலும் நான் உருவாக்கிய அலை சுனாமியாக மாறுகிறது. அதை உருவாக்க நானும் ரசிகர்களும் மக்களை நோக்கிச் செல்வோம். அந்த அரசியல் சுனாமியை யாரும் தடுக்க முடியாது. அதை மக்கள்தான் வலுவான அலையாக மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பெருத்த விவாதங்களை எழுப்பியது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''தமிழகத்தில் கொரோன வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்,'' என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Entertainment sub editor