வலிமை ஸ்பாட்டில் அஜித்தின் சூப்பர் கூல் லுக்..! இணையத்தை கலக்கும் ரீசன்ட் போட்டோ.
முகப்பு > சினிமா செய்திகள்வலிமை படத்தில் நடித்து வரும் அஜித்தின் புதிய லுக் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் தற்போது வெளியாகியுள்ளது. ஜீன்ஸ் மற்றும் ஷர்ட்டில் அஜித் சூப்பர் கூலாக இருக்கும் இந்த போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர் ஒருவருடன் இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார். .இதையடுத்து அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை ட்ரென்ட் அடிக்க தொடங்கியுள்ளனர்.
Exclusive Pic Of Our Chief #ThalaAjith With A Fan 😍🔥#Valimai | #ValimaiDiwali pic.twitter.com/wSj7f8hech
— THALA FANS NAMAKKAL (@AKFC_Namakkal) March 19, 2020