இன்னும் மிரட்டலா.. தலைவர் Paraak! - Fans-க்கு ஓபன் Challenge விட்ட தர்பார் இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் HD புகைப்படங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

Rajinikanth's Darbar HD stills and Poster design will be releasing today

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் HD புகைப்படங்கள் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும். மிரட்டலான ‘தர்பார்’ போஸ்டரை கிரியேட்டிவாக டிசைன் செய்து வெளியிடலாம் என்றும், சிறந்த போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ போஸ்டராக வெளியிடப்படும்’ என்றும் அறிவித்துள்ளார்.

அதன்படி, ரஜினிகாந்தின் 2 HD புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது.