‘After கபாலி தர்பார்-ல தான்…’ வானைத்தொடும் பிரம்மாண்ட முயற்சி!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 02, 2020 10:26 AM
சூப்பர் ஸ்டார் ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கு இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்பத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் தர்பார் படத்தின் ஸ்டிக்கரைக் கொண்ட விமானம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கபாலி படத்துக்காக இது போன்றதொரு விமானம் உருவாக்கப்பட்டதும், அதன் போட்டோ வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
Tags : Anirudh, Darbar, Rajinikanth, AR Murugadoss