சிவகார்த்திகேயன் இந்த சூப்பர்ஹிட் டைரக்டர் படத்தில் மீண்டும் ’ஹீரோ’வா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 02, 2020 07:14 PM
’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பி.எஸ். மித்ரனின் இயக்கத்தில் நடித்த 'ஹீரோ' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை கேஜேஆர் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் அவருடன் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ ஷங்கர், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் உலவி வருகின்றன.
சிவகார்த்திகேயனை வைத்து ஏற்கெனவே பாண்டிராஜ் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப் பிள்ளை என்று 3 படங்களை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Pandiraj, Sivakarthikeyan