''இன்று அற்புதம் நடந்தது, நாளைக்கும்...'' - அதிமுக ஆட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 18, 2019 12:26 PM
உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகும் நிகழ்வு ஆகியவற்றை கொண்டாடும் விதமாக நேற்று (நவம்பர் 17) பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, பார்த்திபன், கார்த்தி, தேவி ஸ்ரீ பிரசாத், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ''இந்த ஆட்சி 4, 5 மாசத்துல கவுந்திடும்னு தமிழ்நாட்டுல சொல்லாத ஆட்களே கிடையாது. ஆனால் அதிசயம் நடந்தது. அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழல. எல்லா தடைகளையும் மீறி தொடர்ந்திட்டு இருக்கு. ஆக, நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்திருக்கு, நாளைக்கும் அற்புதம் அதிசயம் நடக்கும்'' என்று பேசினார். அப்போது ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.