சூப்பர் ஸ்டாரின் பவரால் நிகழ்ந்த அதிசயம்..! - தீவிர மனநோயில் இருந்து குணமடைந்த இளம்பெண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கடவுளாக கருதும் அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் தீரா அன்பு வைத்துள்ளனர்.

Aneesha suffering from psychological disorder recovered after meeting Superstar Rajinikanth

அதன் ஒரு அடையாளமாக தீவிர மனநோயால் உயிருக்கு போராடிய இளம்பெண் உடல்நலம் குணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரணமாகியிருக்கிறார். இது குறித்து அனீஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அனீஷா என்ற பெண்ணுக்கு பைபோலார் பிரச்சனையுடன், மிகவும் கொடிய மன அழுத்தக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற அனீஷாவை காப்பாற்றி, அவரது சிகிச்சைக்கு பல லட்சம் வரை அவரது பெற்றோர் செலவு செய்ததாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை கஷ்டத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றியதாகவும், அதனால் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் உள்ளன. மருத்துவர்கள் என்னால் மற்றவர்களிடம் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என கூறுகிறார்கள். ஆனால் நான் நினைக்கிறேன், என்னால் முடியும். நான் அவரை நேசிக்கிறேன். என்றென்றும் அவரது ரசிகை நான்” என குறிப்பிட்டுள்ளார்.