www.garudabazaar.com
iTechUS

பேர குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தை கலக்கும் வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்..

Rajinikanth Pongal Celebration photos with family

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

 Rajinikanth Pongal Celebration photos with family

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

 Rajinikanth Pongal Celebration photos with family

இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

 Rajinikanth Pongal Celebration photos with family

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன்கள் லிங்கா & யாத்ரா உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் லதா ரஜினிகாந்த்தின் உறவினர் மதுவந்தி & அவருடைய மகனும் இந்த புகைப்படத்தில் உள்ளனர்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது தாயார் லதா ரஜினிகாந்த் தனக்கு பொங்கல் ஊட்டும் தருணத்தை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

Also Read | துணிவு படத்தின் மூலம் முதல் முறையாக அஜித் படைத்த சாதனை.. வினியோகஸ்தர் பகிர்ந்த மாஸ் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Pongal Celebration photos with family

People looking for online information on Rajinikanth, Rajinikanth Pongal Celebration will find this news story useful.