www.garudabazaar.com
iTechUS

துணிவு படத்தின் மூலம் முதல் முறையாக அஜித் படைத்த சாதனை.. வினியோகஸ்தர் பகிர்ந்த மாஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் 'துணிவு'.

Thunivu North America Box Office collection 1 Million USD

Also Read | கைதி படத்தின் இந்தி ரீமேக்.. நரேன் கதாபாத்திரத்தில் தபு?.. வெளியான கேரக்டர் ப்ரோமோ வீடியோ!

பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படம் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் முதல் படமாக 1 மில்லியன் கிளப்பில் துணிவு படம் இணைந்துள்ளது. துணிவு படம் வட அமெரிக்காவில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.16 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை வினியோகஸ்தர் சரிகம நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu North America Box Office collection 1 Million USD

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu North America Box Office collection will find this news story useful.