www.garudabazaar.com
iTechUS

ஷிவின் மாதிரி ஆக்டிங் செஞ்ச அமுது.. விக்ரமனால சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியல😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Amudhavanan Acting Like Shivin funnily in BiggBoss6

Also Read | "ஆத்தாடி இவ்வளவு நாள் அவருகூடவா இருந்தேன்".. BB போட்டியாளர் பற்றி ADK நெகிழ்ச்சி Post..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Amudhavanan Acting Like Shivin funnily in BiggBoss6

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பெட்ரூமில் அமுதவாணன், விக்ரமன், ஷிவின், ராம், மகேஷ்வரி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, ஷிவின் பல்வேறு சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி நடிக்கக்கூடிய திறமை பெற்றவர் என ஜாலியாக கூறுகிறார் அமுது. தொடர்ந்து, ஷிவின் போலவே நடித்தும் காட்டுகிறார். இதனை கண்ட விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

Amudhavanan Acting Like Shivin funnily in BiggBoss6

இதனையடுத்து, சக போட்டியாளர்களை பற்றி பேசும்போதும், அவர்களை நாமினேட் செய்த பிறகு அவர்களிடம் ஷிவின் பேசும் விதம் பற்றியும் சொல்லிய அமுதவாணன், பின்னர் அவரை மாதிரி நடித்தும் காட்டுகிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த போட்டியாளர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கவே, ஷிவின் அமுதவாணனை ஜாலியாக கலாய்க்கிறார். இவை அனைத்தையும் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருக்கும் ரச்சிதாவும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

Also Read | "அப்போவே தெரிஞ்சிடுச்சு".. தன்னுடைய எலிமினேஷன் பற்றி மனம் திறந்த தனலட்சுமி..!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan Acting Like Shivin funnily in BiggBoss6

People looking for online information on Amudhavanan, Amudhavanan Acting Like Shivin, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.