ஹரிஷ் கல்யாணின் நடிப்பை வெகுவாக பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 26, 2019 10:33 PM
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி உள்ளிட்டோர் ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.மேலும், யோகி பாபு, முனீஷ்காந்த், டேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுசு ராசி நேயர்களே படக்குழு ஞாயிற்றுக்கிழமை காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். அப்போது அவருக்கு டீஸர் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்த ரஜினிகாந்த், டீஸர் பிடித்திருப்பதாகவும் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், ஹரிஷ் கல்யாண் நன்றாக நடித்திருப்பதாகவும் இந்த டீஸர் மிக கமர்ஷியலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.