நடிகர் லக்ஷ்மனுக்கு மதுரையில் விமர்சையாக நடைபெற்ற திருமணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 26, 2019 09:31 PM
இயக்குநர் பாராதிராஜாவின் 'அன்னக்கொடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் லக்ஷ்மன். பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான ஜீவா திரைப்படத்தில் கிரிக்கெட்டராக யதார்த்தமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் லக்ஷ்மன் சம்யுக்தா ராஜ்குமார் என்பவருடன் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற்றது. மணப்பெண் சம்யுக்தா தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு இன்ஸ்டியூட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார்.
தற்போது சம்யுக்தா திருமணத்துக்கு பிறகு தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறுகிறாராம். நடிகர் லக்ஷ்மன் தற்போது கார்மென்ட் எக்ஸ்போர் வியாபாரத்தை பொறுப்பேற்று நடத்திவருகிறார்.