'நெருப்பு பேரோட...' - சூப்பர் ஸ்டாரோட தர்பாரின் 'சும்மா கிழி' பாடல் லிரிக்ஸ் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படத்தின் முதல் பாடலான சும்மா கிழி நாளை (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விவேக் எழுதிய இந்த பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார்.

Superstar Rajinikanth's Darbar Chumma Kizhi Lyrics is out

இந்நிலையில் இந்த பாடலின் பாடல்வரிகளை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நெருப்புப் பேரோட, நீ குடுத்த ஸ்டாரோட, இன்னைக்கும் ராஜா, கேட்டுப் பாரு-சும்மா கிழி, கருப்புத் தோலோட, சிங்கம் வரும் ஸ்சீனோட, எடமே பத்திக்கும் அந்தமாரி என்று குறிப்பிட்டுள்ளார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.