இரவு பொங்கல் பரிசு காத்திருக்கு..! தலைவரின் ‘சும்மா கிழி..’ சர்ப்ரைஸ் தரும் தர்பார் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

Rajinikanth's Darbar first Single Chumma Kizhi lyrics Couple of lines will be releasing today

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ சரவெடி இசை தயாராகி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்தார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிரக்கான ‘சும்மா கிழி’ பாடல் நாளை (நவ.27)ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதிய விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில், ‘சும்மா கிழி’ பாடலின் சில வரிகளை இன்று (நவ.26) இரவு 7 மணிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.