சும்மா கிழி! - சூப்பர் ஸ்டார் - அனிருத் கூட்டணியின் 'தர்பார்' முதல் பாடல் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அனிருத்  'தர்பார்' படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் முதல் பாடல் குறித்து அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Anirudh Announced about Superstar Rajinikanth's Darbar first single

அதில், ''தர்பார்' முதல் பாடல் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. எஸ்.பி.பி இந்த பாடலை பாடியிருக்கிறார். விவேக் இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை கேட்க தயாராகுங்கள் சும்மா கிழி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது.