Video: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி ஒரே ஷார்ட் ஃபிலிமில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் குறித்து அறிவுறுத்தும் விதமாக பிரபல இந்திய நட்சத்திரங்கள் இணைந்து ஃபேமிலி என்ற பெயரில் ஷார்ட் ஃபிலிம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  இந்த ஷார்ட் ஃபிலிமின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்த படியே நடித்துள்ளனர்.

இந்த ஷார்ட் ஃபிலிமில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ஷிவ ராஜ்குமார், ஆலியா பட், ரன்பீர் கபூர் என இந்திய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் இந்த ஷார்ட் ஃபிலிமில் நடித்துள்ளனர்.

நடிகர் அமிதாப் பச்சனின் சன் கிளாஸ் தொலைந்து விடுவது போலவும், அதனை ரன்பீர்  கபூர், பிரபலங்களிடம் இதுகுறித்து விசாரிப்பது போலவும் அந்த ஷார்ட் ஃபிலிம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் எல்லா நடிகர்களும் அவர்களது சொந்த மொழியில் பேசுகின்றனர்.

இறுதியில் பேசும் அமிதாப் பச்சன், நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இந்த ஷார்ட் ஃபிலிம் செய்துள்ளோம். நீங்களும் வீட்டிலேயே இருங்கள். அது ஒன்று தான் உங்களை இந்த ஆபத்தான வைரஸில் இருந்து பாதுகாக்கும்.

இந்தியத் திரைத்துறை ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் எங்களை சாரந்து, நிறைய குடும்பங்கள் உதவி வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஸ்பான்சர்ஸ் உடன் இணைந்து அவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறோம். இந்த கஷ்டமான காலத்தில் இது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்'' என்றார்.

VIDEO: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி ஒரே ஷார்ட் ஃபிலிமில் வீடியோ

Entertainment sub editor