சொல்ல பதட்டமா தான் இருக்கு ஆனா... நடிகை ஹன்சிகா சர்ப்ரைஸ்.... என்ன இப்படி இறங்கிட்டாங்க ..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை வனிதா. பின்பு விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச் சென்றார். அதன்பிறகு தான் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க போவதாக அறிவித்திருந்தார் அதன்படி கொரோனா நேரத்திலும் முகத்தில் மாஸ்க் அணிந்து சேனல் வேலைகளில் மும்முரமாக இறங்கி வந்தார். தற்போது நடிகை வனிதா தனது சேனலின் முதல் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த புகைப்படத்தையும் நேற்று பதிவிட்டிருந்தார்.

இது ஒருபுறமிருக்க பிரபல நடிகை ஹன்சிகாவும் இதே பாணியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்த ஹன்சிகா இப்பொழுது ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க போகிறாராம். நேற்றையதினம் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று கூறி இருந்த நிலையில், மாலை இந்த செய்தியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.