மதன்பாபு சிரிச்சு பார்த்திருப்பீங்க.. ஆனா இப்படி..?! - குடும்பத்துடன் செம க்யூட் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மதன்பாபு தன் குடும்பத்தினருடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் மதன்பாபு. 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியில் அசத்திய இவர், அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இவர் பல படங்களில் தற்போது வரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மதன்பாபு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் இடம்பெற்ற, அஞ்சலி அஞ்சலி பாடலுக்கு அவர் கிட்டார் இசைக்க, அவரது குடும்பத்தினர் அப்பாடலை அழகான பாடும் வீடியோவை இணையத்தில் வெளியாகியுள்ளது. மதன்பாபுவின் இந்த புதிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
மதன்பாபு சிரிச்சு பார்த்திருப்பீங்க.. ஆனா இப்படி..?! - குடும்பத்துடன் செம க்யூட் வீடியோ. வீடியோ
Tags : Madhan Babu, Viral video, Anjali Song, Singing, Family