தலைவர் ரஜினி ரசிகர்கள்ன்னா சும்மாவா..? - 450 வழக்கறிஞர்கள் செய்த வேற லெவல் நலத்திட்டம் இது!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பாக அவரது ரசிகர்கள் செய்த மாபெரும் நலத்திட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோருடன் சேர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்த ரஜினி விரைவில் அரசியல் களத்தில் இறங்க போகிறார் எனவும் கூறப்படுகிறது, இதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் வழக்கறிஞர் அணியின் சார்பாக உடல் தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் 450 வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். முகப்பேரில் இருக்கும் எம்.எம்.எம் ஹாஸ்பிட்டல் மற்றும் மோஹன் பவுன்டேஷனுடன் இணைந்து இந்த உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்வை கடந்த ஞாயிறு அன்று நடத்தியிருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் கே.உதயகுமார் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஆர்.அரவிந்த்குமார் வரவேற்புரை வழங்கியுள்ளார். மேலும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஏ.வி.கே.ராஜா மற்றும் இணை செயலாளர் ஆர்.சூர்யா அவர்களும் வரவேற்புரை வழங்கியுள்ளார். இத்துடன் சிறப்பு அழைப்பாளர்களாக பாலம் கலியாண சுந்திரம், ரவீந்திரன் துரைசாமி, நடிகர் மயில்சாமி மற்றும் வழக்கறிஞர் கே.அறிவழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.